Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் அடர்ந்த கூந்தலை பெற உதவும் எண்ணெய் தயாரிப்பு பற்றி பார்ப்போம் !!

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (12:39 IST)
பெண்களின் தலை முடியை வைத்தே அவர்களை கணித்து விடலாம். அழகான, அடர்த்தியான, கருமையான, நீளமான கூந்தலாகும். பெண்களுக்கு பரிபூரண அழகை அளிப்பது அடர்ந்த கூந்தலும் அழகிய பின்னலும்தான்.


தேங்காய் எண்ணெய் 1 லிட்டர், விளக்கெண்ணெய் கால் லிட்டர், வசம்புப்பொடி 5 கிராம்,  கரிசலாங்கன்னி பொடி 5 கிராம், நெல்லிக்காய் பொடி  5 கிராம், கறிவேப்பிலை பொடி 5 கிராம், மருதாணி பொடி 5 கிராம், அரோமா ஆயில் 2 சொட்டு, காட்டன் துணி ஆகியவை தேவையான பொருட்கள் ஆகும்.

செய்முறை: ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் மற்றும் கால் லிட்டர் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலக்கவும். மேலே கூறிய அனைத்து பொடிகளையும் தனித்தனியாக காட்டன் துணியில் சிறு மூட்டைகளாக கட்டி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் கலந்து வைத்துள்ள எண்ணெயில் 2 சொட்டு அரோமா ஆயிலை சேர்க்கவும். நன்கு கலந்து விடவும். காட்டன் துணியில் கட்டி வைத்துள்ள சிறு மூட்டைகளை எண்ணெய்யில் மூழ்குமாறு வைக்கவும். அப்படியே ஒரு வாரம் நன்கு ஊறவேண்டும்.

ஒரு வாரம் முடிந்த பிறகு மூட்டைகளை எடுத்து விடவும். அந்த பொடியின் தன்மை அனைத்தும் எண்ணெய்யில் இறங்கி கலந்து இருக்கும். அந்த எண்ணெய்யை மிதமான தீயில் வைத்து சூடு செய்து தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

முழங்கால் செயற்கை தசைநார் சிகிச்சை! தமிழகத்தில் முதலிடம்! – ரெலா மருத்துவமனை!

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்..!

உடலுக்கு தேவையான புரதச் சத்துக்கள் உணவுகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments