சருமத்தின் பொலிவை தக்க வைக்க உருளைக்கிழங்கு உதவுகிறது. உருளைக் கிழங்கை பயன்படுத்தி தயாரிக்கும் பேஸ் பேக் பருக்களால் உண்டான தழும்புகள், புள்ளிகள் ஆகியவற்றை மறைக்க உதவுகிறது.
உருளைக்கிழங்கில் உள்ள அன்டி ஆக்சிடென்ட், சருமத்தில் தீங்கு விளைவிக்கும் கூறுகளை எதிர்த்து போராட உதவுகிறது. இதனால் கிருமிகளும், பக்டீரியாக்களும் அழிக்கப்படுகின்றன. உருளைக் கிழங்கில் உள்ள அமிலத்தன்மை, சருமத்தில் அடைக்கப்பட்ட துளைகளை திறக்க வைக்க உதவுகிறது.
குறிப்பு:
தக்காளி சாறின் அமிலத்தன்மையுடன் ஒருங்கிணைந்த உருளைக்கிழங்கு, சருமத்தில் உண்டாகும் பருக்களில் பல அற்புதங்களை நிகழ்த்துகிறது. இந்த ஒருங்கிணைந்த கலவையுடன் தேன் சேர்த்துக் கொள்வதால் சருமம் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது.
தேவையான பொருட்கள்: ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு விழுது அல்லது சாறு, ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் தக்காளி விழுது அல்லது சாறு.
செய்முறை: உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி விழுது அல்லது சாற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்த கலவையுடன் தேன் சேர்த்து ஒரு பேஸ்ட் தயாரித்துக் கொள்ளவும்.
இந்த கலவையை உங்கள் முகத்தில் சமமாக எல்லா இடங்களிலும் தடவவும். பிறகு 15-20 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். பருக்கள் மறையும்வரை ஒரு நாளுக்கு ஒரு முறை இந்த பேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம்.