தலைமுடி பிரச்சனைகளுக்கு அற்புத தீர்வு தரும் சில குறிப்புகள் !!

Webdunia
சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கலாம்.
 

பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும். தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.
 
வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கனும். பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது.
 
வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும். அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
 
வேப்பிலை சாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம். வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்.
 
தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம். மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.
 
வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம்மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1 மணிநேரம் ஊறவைத்து பின்பு குளிக்கலாம். மண்டை கரப்பான் நோய் குணமாக பப்பாளி பாலையும் படிகாரத்தையும் சேர்த்து தடவலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று வேளை உணவை விட இது ரொம்ப முக்கியம்.. ஆரோக்கியம் குறித்த டிப்ஸ்..!

சர்க்கரை நோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய ஏ.ஐ. ஆய்வு!

தயிர் உணவு மட்டுமல்ல.. அழகுக்கும் உதவும்.. என்னென்ன பலன்கள்?

நீடித்த ஆரோக்கியத்துக்கு 8 முக்கிய பழக்கங்கள்: ஹார்வர்டு மருத்துவர் அறிவுரை

உடல் பருமனால் கருத்தரிப்பதில் சிக்கலா? தாழ்வு மனப்பான்மை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை

அடுத்த கட்டுரையில்
Show comments