Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலர் சருமத்தை சரிசெய்ய உதவும் அழகு குறிப்புகள் !!

Webdunia
எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முகத்தில் பூசிக்கொண்டு, 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவிக்கொள்ளவும். இதுவும் உலர் சருமத்தை குணமாக்குவதை  உணரலாம்.

வெள்ளரிக்காயைச் சிறு துண்டுகளாக்கிக்கொண்டு, மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். அடுத்ததாக கொஞ்சம் ஆலோவேரா ஜெல் அல்லது யோகர்ட் வேண்டும்.  இதையும் நன்றாக கலந்து, முகத்தில் பூசிக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவிக்கொள்ளவும்.
 
இரண்டு முட்டைகளை எடுத்து மஞ்சள் கருவை தனியே பிரிக்கவும். மஞ்சள் கருவை மட்டும் எடுத்து அதை கலந்து முகத்தில் பூசிக்கொள்ளவும். 10 நிமிடங்கள்  கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவிக்கொள்ளவும்.
 
ஸ்பூன் கொண்டு இரண்டு வாழைப்பழங்களை நன்றாக மசித்து, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்துமுகத்தில் பூசிக்கொண்டு 20 நிமிடங்கள் அப்படியே இருக்கவும்.  அதன் பிறகு குளிர்ந்த நீரால் முகம் கழுவிக்கொள்ளவும்.  
 
5 ஸ்பூன் தேன், 5 ஸ்பூன் தூள் மற்றும் 2 ஸ்பூன் மாவு கொண்டு சாக்லெட் பேக்கும் செய்து பயன்படுத்தலாம். இந்த கலவையை முகத்தில் பூசிக்கொண்டு 15  நிமிடங்கள் கழித்து முகம் கழுவிக்கொள்ளவும்.  
 
உலர் சருமத்தில் இருந்து விடுபட இஞ்சியும் கைகொடுக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இஞ்சி சாறு எடுத்து, தேன் மற்றும் பன்னீர் கலந்து, விரல்களில்  எடுத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவிக்கொள்ளவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments