Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெளிவான சருமத்திற்கு உருளைக்கிழங்கு மஞ்சள் பேஸ்பேக்!!

Webdunia
தேவையான பொருட்கள்: 1/2 உருளைக் கிழங்கு (துருவியது), 1/2 ஸ்பூன் முகத்திற்கு தடவும் மஞ்சள் தூள்
செய்முறை: 
 
துருவிய உருளைக்கிழங்கு மற்றும் மஞ்சளை ஒன்றாகக் கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவவும். 15 நிமிடங்கள் காய்ந்தவுடன் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனைச் செய்யலாம். 
மஞ்சள் ஒரு கிருமி நாசினி மற்றும் அழகு சிகிச்சைக்கு பயன்படுத்தும் ஒரு முக்கிய பொருள். இந்த பேஸ் பேக் முகத்தில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாவைக் கொன்று, துளைகளைத் திறந்து,சரும சேதங்களைப் போக்கி, முகத்தை பளிச்சென்று மாற்றுகின்றது.
 
பயன்கள்:
 
உருளைக் கிழங்கில் ப்ரோ வைட்டமின் ஏ மற்றும் பீனோலிக் கூறுகள் உள்ளன. இவை வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவுபவையாகும். இதனால் சருமம் பொலிவாக ஆரோக்கியமாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments