Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முகத்தில் ஏற்படும் பருக்கள் மறைய அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள்...!!

முகத்தில் ஏற்படும் பருக்கள் மறைய அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள்...!!
முகப்பருக்கள் வருவதற்கான முக்கிய காரணம் ஹார்மோன் சுரப்பு, எண்ணெய் பசை அதிகரிப்பு, கிருமி தொற்று போன்றவை தான் காரணம். அதிக எண்ணெய் பசை  உள்ள சருமம் கொண்டவர்கள் அவ்வப்போது முகத்தை சோப்பு மற்றும் நீரால் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 
இந்த பருக்களில் சீழ்போன்ற திரவம் நிறைந்து கரும்புள்ளிகளையும் உருவாக்கும். இந்த சீழில் உள்ள கிருமிகள் பரவி மேலும் முகப்பருக்களை ஏற்படுத்தும் வாய்ப்பு  உள்ளது. எனவே முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
 
முகப்பருக்களை அடிக்கடி கையால் தொட்டும் பார்க்க கூடாது. நகத்தால் கிள்ளவும் கூடாது. இதனால் கிருமித்தொற்று பரவி அடுத்தடுத்து புதிய முகப்பருக்கள்  ஏற்படும். வேப்பிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.
 
வேப்பம் கொழுந்தை அரைத்து முகப்பருக்களில் பூசி 15 நிமிடங்கள் ஊறவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதே போல கஸ்தூரி மஞ்சள், சோற்றுக்கற்றாழை  இவற்றையும் பயன்படுத்தலாம். 
 
படிகாரம் கலந்த நீரில் முகத்தை கழுவலாம். பச்சை காய்கறிகள், பழங்கள் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். எண்ணெய் அதிகம் உள்ள உணவினை தவிர்க்க வேண்டும். மலச்சிக்கலை கட்டுப்படுத்த வேண்டும்.
 
கைகளால் பருக்களை கிள்ளிக்விடப்பட்ட பருவின் சீழ் அகன்றவுடன் தோலில் ஒரு பள்ளம் ஏற்பட்டு வடுவாக நிலைத்து விடும். அடிக்கடி பருக்களை  தொடுவதாலும் அழுத்துவதாலும் அவை பெருத்து ஆழமாக ஆகிவிடுவதும் உண்டு.
 
துத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவி வரப் பருக்கள் மறையும். நன்னாரி வேர் கஷாயத்தால் பருக்கள் தீரும்.
 
முகத்தில் தழும்புகள் அதிகம் இருந்தால் ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவிவரத் தழும்புகள் மறைந்து முகம் பளபளப்பாக மாறிப் பொலிவு பெறும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூலிகை குடிநீர் தயாரிப்பும் அதன் மருத்துவ நன்மைகளும்...!!