பொலிவான, மிருதுவான, மென்மையான சருமம் என்பது அனைவருக்குமான விருப்பம். சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது, கருவளையம் உள்ளிட்டவை பெண்களை மட்டுமல்ல ஆண்களுக்கும் கவலையை அளிக்கக் கூடியதுதான். இதற்கு வீட்லேயே இருந்து செய்யக்கூடிய வழி தான் கேரட் எண்ணெய்.
கேரட்டில் பீட்டாகரோட்டின் என்ற சத்து உள்ளது. இது கண் பார்வைக்கு நல்லது. மேலும் சருமத்தின் ஆரோக்கியத்தைக் காக்கவும் இது உதவுகிறது என்று படித்துத் தெரிந்திருப்போம். தினமும் கேரட்டை சாப்பிட்டு வந்தால், காரட் ஜூஸ் அருந்தி வந்தால் ஒரு சில வாரங்களில் சருமத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கண்கூடாகப் பார்க்கலாம்.
கேரட்டை தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி, அந்த எண்ணெய்யைச் சருமம் மற்றும் முடி மீது தடவி வந்தாலும் கூட சருமம் மற்றும் கேசம் பொலிவு பெறும்.
கேரட்டை தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி, அந்த எண்ணெய்யைச் சருமம் மற்றும் முடி மீது தடவி வந்தால் சருமம் மற்றும் கேசம் பொலிவு பெறும்.
கேரட்டை துருவி அல்லது சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கேரட்டை போட வேண்டும். மிதமான வெப்பத்தில் கேரட் சில நிமிடம் வேகட்டும். எண்ணெய் கேரட் நிறத்துக்கு மாறும். அப்போது அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
கேரட் 24 மணி நேரத்துக்கு அந்த எண்ணெய்யிலேயே ஊறட்டும். அதன் பிறகு அதை எடுத்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும் போது எல்லாம் இந்த எண்ணெய்யை எடுத்து சருமம் மற்றும் முடியில் தடவிப் பயன்படுத்தலாம்.