Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சருமத்தில் எண்ணெய் பசை இருந்தால் முகப்பரு வருமா...?

Acne
, புதன், 31 ஆகஸ்ட் 2022 (10:36 IST)
முகப்பரு விஷயத்தில் சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை எடுக்காவிடில் முகத்தில் கரும்புள்ளிகள், ஆழமாக தழும்புகள் ஏற்பட்டு விகாரமான தோற்றத்தை ஏற்படுத்தும்.


எண்ணெய் பசையுள்ள சருமம் உடையவர்களுக்கு அதிகம் பருக்கள் உண்டாக வாய்ப்பிருக்கிறது. அதனால் சருமத்தில் எண்ணெய் பசை ஏற்படுவதை தவிர்ப்பது அவசியம்.

பருவானது பருத்து பழுத்து விட்டால் பச்சரிசி மாவுடன் சிறிது மஞ்சளை அரைத்து அதைச் சூடாகக் கிளறி, கட்டியின் மேல் வைத்து, பிறகு காலையில் சோப்பு போட்டு சற்று சூடான நீரால் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். அதே போல பயத்தம் பருப்பு போட்டுக் குளித்தால் எந்தத் தோல் சம்பந்தமான எந்த வியாதியும் நம்மை நெருங்காது.

ஆயுர்வேத சோப்புகள் போட்டுக் குளித்தாலும் பரு உண்டாவதை தடுக்கலாம். அதுபோல செயற்கையான க்ரீம், பவுடர் இவற்றுக்குப் பதிலாக, பாலேடு முகத்தில் தடவிக் கொண்டு, பிறகு கழுவினால் முகம் பளபளப்பாக மெருகேறி இருக்கும்.

தேனுடன் சிறிது லவங்கப்பட்டை தூளைச் சேர்த்து முகத்தில் தடவலாம். கடுகை சிறிது தேனுடன் கலந்து முகத்தில் தடவலாம். அவ்வாறு தடவினால் முகப் பரு பிரச்சனை நம்மை அண்டாது.

மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். ஆனால் சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தினமும் குளிக்கும்போது முகத்தில் சோப்புக்குப் பதில் பாசிப்பயறு மாவைத் தேய்த்துக் குளித்துவர முகம் பொலிவு பெறும். கரும் புள்ளிகள் மறையும்.

தக்காளி சாற்றினை முகத்தில் தடவிவர முகப்பரு நீங்கும். காய்ச்சாத பாலை முகத்தில் தடவிவர, முகப்பரு நீங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7 ஆயிரமாக உயர்ந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!