Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி சருமத்திற்கு புத்துணர்ச்சியை தரும் அழகு குறிப்புகள் !!

Skin Care
, சனி, 7 மே 2022 (17:55 IST)
முகத்திற்கு பேஷியல் செய்வதன் மூலம் நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி முகத்திற்கு பொலிவினை தரும். பேஷியல் செய்வதால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி சருமத்திற்கு புத்துணர்ச்சியை தருகிறது.


ஒரு சுத்தமான சிறிய பாத்திரம் எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவேண்டும். பிறகு ஒரு காட்டன் பேட் எடுத்து மேற்சொன்ன கலவையில் நனைத்து முகத்தில் தடவேண்டும்.

இப்படி முகத்தில் தடவுவதன் மூலம் தோலில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி சருமம் சுத்தமாகவும்,  புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

சுத்தமான பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் இரண்டு ஸ்பூன் உருளைக்கிழங்குச் சாறுடன் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவேண்டும். பிறகு இந்த கலவையை முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும்.

முகத்தை கழுவாமல் சிறிது நேரம் முகத்தில் நீராவி பிடித்தால் இன்னும் நன்றாக இருக்கும். காரணம், முகத்திற்கு நீராவி பிடிப்பதினால் முகம் மென்மையாகவும், சருமத்தில் உள்ள கருமை அகன்று முகம் பிரகாசமாக இருப்பதுடன் செல்களுக்கு புத்துயிர் அளிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தித்திப்பான குலோப் ஜாமுன் செய்ய !!