Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வறண்ட சருமத்தை சரிசெய்து என்றும் இளமையாக வைத்திருக்க உதவும் அழகு குறிப்புகள் !!

Vitamin E
, புதன், 27 ஜூலை 2022 (12:52 IST)
வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெய் வறண்ட முகத்துக்கு ஈரப்பதம் அளிக்கும். தளர்வு அடைந்த சருமங்கள் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.


சரும பராமரிப்புக்காக தயாரிக்கப்படும் பொருட்களில் வைட்டமின் ஈ சேர்க்கப்படுகிறது. சருமம் முதிர்ச்சி அடைவதை தள்ளிப்போடும் ஆற்றல் இதற்கு உண்டு. ஆன்டிஆக்சிடெண்டுகள் வைட்டமின் ஈயில் அதிகமாக உள்ளது.

வைட்டமின் ஈ சத்து போதுமான அளவு இருந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதாக தடுக்கலாம். உணவின் மூலம் வைட்டமின் ஈ சத்தை நேரடியாக பெற்று இயற்கையான வழியில் அழகை பாதுகாக்க முடியும்.

இரவில் தூங்குவதற்கு முன்பு வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெய்யை நகங்களை சுற்றியும், விரல்களிலும் தடவி மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நகங்கள் இயற்கையான வெளிர் சிவப்பு நிறத்தோடும் வலிமையோடும் காணப்படும்.

தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெயை கண்களை சுற்றிலும் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் கருவளையமும் சுருக்கங்களும் நீங்கி கண்களில் பொலிவு ஏற்படும்.

வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெய்யை சில துளிகள் எடுத்து முகம் மற்றும் கழுத்துபகுதியில் தடவலாம். இதனால் முகத்தில் எண்ணெய் வடியும் சிரமம் ஏற்படாது. வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெய் வறண்ட முகத்துக்கு ஈரப்பதம் அளிக்கும். வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெய் சருமத்தை இறுக்கமாக்கி ரத்த ஓட்டத்தை அதிகரித்து இளமையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்கள் நிறைந்துள்ள கொய்யா !!