Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமத்தை பளிச்சிட வைக்கும் அழகு குறிப்புகள்....!!

Webdunia
பால் பவுடரில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள கருமை நிறம் மறைந்து முகத்தின் நிறம் அதிகரிக்கும்.

ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.பின் புளித்த தயிர் சேர்த்து நன்கு கலந்து,  முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் சருமத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.
 
எலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில்  தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.
 
துளசியில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடன்ட் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள், சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பொலிவோடும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக துளசி முகப்பரு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.அதற்கு துளசியை அரைத்து பேஸ்ட் செய்து,  முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
 
குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ, குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்பட்டு காணப்படும். அதிலும் இந்த செயலை தினமும் ஒருவர் பின்பற்றினால், சீக்கிரம் வெள்ளையாவதைக்  காணலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments