Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபசுரக் குடிநீரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன...?

Webdunia
கபசுரக் குடிநீர் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாக கருதப்படும் கபசுரக் குடிநீர் சளி, காய்ச்சல், களைப்பு, உடல் வலி  ஆகியவற்றை போக்கும் திறன் கொண்டது.

நாட்டு மருந்து கடைகளில்: 1. ஆடாதொடை இலை, 2. சிறு தேக்கு, 3. கரிசலாங்கண்ணி, 4. சுக்கு, 5. திப்பிலி, 6. சிறுகாஞ்சேரி வேர், 7. அக்ரகாரம், 8. முள்ளி வேர், 9.  கற்பூர வள்ளி இலை, 10. கோஷ்டம், 11. சீந்தில் தண்டு, 12. நிலவேம்பு சமூலம், 13. வட்ட திருப்பி வேர், 14. கோரைக்கிழங்கு, 15. கடுக்காய் தோல் ஆகிய மருத்துவகுணம் கொண்ட பொருட்களை கொண்டு இந்த கபசுரக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில் இது பொடியாகவும் கிடைக்கும். நிலவேம்பு கஷாயம்  செய்வது போலவே கொதிக்கவைத்து சுண்டிய பிறகு வடிகட்டிக் குடிக்கலாம்.
 
கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது: குழந்தைகளுக்கு 15 மில்லி லிட்டர் கஷாயத்தில் தேன் கலந்து ஒரு ஸ்பூன் தினமும் கொடுத்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.  பெரியவர்கள் ஒருவேளைக்கு 30 மில்லி குடிக்கலாம். கர்ப்பிணிகள் கபசுரக் குடிநீரைத் தவிர்ப்பது நல்லது.
 
சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.  மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலே குறிப்பிட்டுள்ள 15-க்கும்  மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது. இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும்  சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல், ஆகியவைகளுக்கு கை கொடுத்து உதவும் என தெரிவிக்கப்படுகிறது. 
 
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம் என்பது சித்த மருத்துவர்களின் கருத்தாகும். காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீரை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

சித்திரா பௌர்ணமி ஸ்பெஷல்: சித்ரான்னம் செய்வது எப்படி?

கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்: காரணங்கள் மற்றும் தீர்வுகள்

கோடை வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

சரியான தூக்கம் இல்லையென்றால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

புத்தக விமர்சனம்: Western Media Narratives on India: From Gandhi to Modi! ஒரு விமர்சனப் பார்வை

அடுத்த கட்டுரையில்
Show comments