எளிதாக கிடைக்க கூட பழங்களில் ஒன்று வாழைப்பழம். இதில் உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல் அழகு சார்ந்த விஷயங்களுக்கு வாழைப்பழம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
வாழைப்பழத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் அது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் C உள்ளதால் சுருங்கிய தோல்களை சரி செய்கிறது. மேலும், சருமத்தின் நீர்ச்சத்து குறையாமல் இருக்க நிலையாக பாதுகாக்கிறது. வயது முதிர்ச்சி வெளியில் தெரியாதவாறு இறுக்கமான தோல்களை வைத்திருக்க இது பெரிதும் உதவும்.
.
வாழைப்பழ பேக் எப்படி செய்வது என பார்க்கலாம்:
ஒரு வாழைப்பழத்தை எடுத்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் , 2 முதல் 3 சொட்டு கிளிசரினை சேர்த்து, கொஞ்சம் சந்தன பவுடரையும் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும். இப்போது முகத்தை நன்றாக கழுவிவிட்டு இந்த பேஸ் பேக்கினை முகத்தில் தடவவும். அடுத்த
20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும். பிறகு சுத்தமான குளிர்ந்த நீரைக்கொண்டு முகத்தை நன்றாக கழுவவும். இப்போது பளபளப்பான சருமத்தை பார்த்து ஆச்சரியப்படுவீர்கள்.
இதனை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யலாம். இதனால் உங்கள் முகம் பளபளவென இருக்க தொடங்கும்.