Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலைமுடி வளருவதில் ஆவாரம் பூவின் அற்புத பங்கு...!!

தலைமுடி வளருவதில் ஆவாரம் பூவின் அற்புத பங்கு...!!
தலை முடி வளருவதில் இருந்தும் நீரழிவு நோய், மாதவிடாய் கோளாறுகள் என பல ஆரோக்கிய நன்மைகள் பெற ஆவாரம்பூ உதவுகிறது. 

ஒரு பிடி ஆவாரம் பூவை  தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள். தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில்  ஊற்றி குளித்தால் முடி மினுமினுப்பாகவும், பளபளப்பாகும்.
 
ஆவாரம்பூ 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம்பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர, கருகருவென கூந்தலை பெறலாம்.
 
ஆவாரம் பூவின் பட்டை, வேர், இலை என அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும். வெயிலில் வெளியே செல்லும்போது  ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் நம்மை தாக்காது.
 
கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் இந்த ஆவாரம் பூ. எனவே முடி உதிர்வு பிரச்சனை கூந்தலில் ஆவாரம் பூவை வைத்து கொண்டால் உடல்  உஷ்ணத்தினால் ஏற்படும் முடி உதிர்வு பிரச்சனை, உடனே சரியாகும்.
 
ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள். உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும்.
 
ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள். சூட்டினால் ஏற்படும் கண்நோய் குணமாகும். ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய சாப்பிடக்கூடாத உணவுமுறைகள் என்ன...?