பப்பாளியை பால் மற்றும் தேனுடன் செர்த்து நன்றாக மிக்சியில் அறைத்து க்ரீம் போல் மாறியவுடன் முகற்றில் பூசவும்.
பாதாம் பருப்புகளை ஊரவைத்து அறைத்து எடுக்கப்பட்ட பாதாம் பாலை முகற்றில் பூசவும்.
ஒரு தக்காளியை எடுத்து அரைத்து பேஸ்ட்டாக மாற்றி அதனுடன் ஒரு தேக்கரண்டியளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். பின்னர் முகத்தினை நன்றாகக் கழுவி கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள்.
ஒரு தக்காளியை எடுத்து அரைத்து அதனுடன் ஒரு தேக்கரண்டியளவு தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் விட்டு பின்னர் கழுவுங்கள். இந்த முறையை வாரத்தில் 3 முதல் 4 முறை செய்யலாம்.
தயிரை மஞ்சள் அல்லது தேனை கலந்து முகற்றில் பூசவும். இதைத் தொடர்ந்து செய்தால் சருமம் மிருதுவாக மாறிவிடும்.
வாழைப்பழத்தை நன்கு பிசைந்து முகற்றில் பூசி வர சருமம் வலுவலுப்பாக மாறிவிடும்.
தேன் மற்றும் எலுமிச்சையை நன்றாக கலந்து பஞ்சைக் கொண்டு பூசவும். சருமம் மசற்று பொலிவு பெரும்.