Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முகத்தை பராமரிக்க உதவும் பாதாம் எண்ணெய் !!

Almond oil
, செவ்வாய், 17 மே 2022 (14:44 IST)
பாதாம் எண்ணெய் ஒரு சிறந்த ஃபேசியல் ஸ்க்ரப். இது முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் எளிதில் வெளியேற்றிவிடும்.


1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 2டேபிள் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் பூசி  காய வைத்து பின்னர் கழுவ வேண்டும். இதனால் முகமானது புதுப் பொலிவுடன்  அழகாக காட்சி அளிக்கும்.

1 தேக்கரண்டி தேன், அரை தேக்கரண்டி பாதாம் எண்ணெய்யை ஒன்றாக கலக்கவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி இரவு முழுவதும் உலர விடவும்.
அடுத்தநாள் காலையில், இளஞ்சூட்டு நீரில் முகத்தை கழுவவும். இதனை வாரம் 2 முதல் 3 முறை செய்துவர அழகான மற்றும் மேன்மையான சருமத்தைப் பெறலாம்.

ரோஸ் வாட்டர் 1 தேக்கரண்டி, பாதாம் எண்ணெயை அரை தேக்கரண்டி சேர்த்து, இதனை  இரவு  முகத்தில் தடவி உலர விடவும். மறுநாள் காலையில், மென்மையான சுத்தமான  துணி ஒன்றினால் வெவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யவும்.

வாரத்திற்கு 3 முதல் 4 முறை இப்படி செய்துவர அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதை கட்டுப்படுத்தும் தக்காளி !!