Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிருதுவான சருமத்தை பெற உதவும் பாதாம் எண்ணெய் !!

Webdunia
பாதாம் எண்ணெய்யில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பிற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பொருட்கள் அதிகமுள்ளது. பாதாம் எண்ணெய் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வி தருகிறது. 

பால் மற்றும் பாதாம் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் அரை தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் பால் 2 தேக்கரண்டி விட்டு நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை முகத்தை சுத்தப்படுத்தும் சுத்திகரிப்பானாக பயன்படுத்தலாம். இந்தக் கலவையை முகத்தில் தடவி, வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தப்படுத்தவும்.  அழகான மற்றும் மிருதுவான சருமத்தை பெறலாம்.
 
பழுப்புச் சர்க்கரை மற்றும் பாதாம் எண்ணெய் 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய்யுடன் 1 தேக்கரண்டி பழுப்புச் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக்  கலவையை உங்கள் சருமத்தின் மீது மெதுவாக தேய்த்து மசாஜ் செய்திடவும். மசாஜ் செய்த பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து முகத்தை துடைக்க  வேண்டும்.
 
வாரத்திற்கு ஒருமுறை, இந்த முகப்பூச்சை உபயோகிப்பதன் மூலம் உங்களுடைய சருமம் மிகவும் பிரகாசமான ஒளியைப் பெறும்.
 
படிகாரத் தூள் மற்றும் பாதாம் எண்ணெய் 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய்யை 1/3 தேக்கரண்டி படிகாரத்தூளுடன் நன்கு கலக்கவும். இந்தக் கலவையை உங்கள்  தோல் மீது மெதுவாக தடவி மிருதுவாக மசாஜ் செய்யவும். 
 
பின்னர், வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு உங்களுடைய முகத்தை கழுவ வேண்டும். பளபளப்பான சருமத்தைப் பெற இந்த முகப்பூச்சை ஒரு மாதத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும். 

தொடர்புடைய செய்திகள்

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments