ஒரு சிலருக்கு பேசிக் கொண்டே சாப்பிடுவதால் உணவு தொண்டையில் சிக்கிக் கொள்ளும் என்றும் இதனால் அவர்களது உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றும் கூறப்படும் நிலையில் இது குறித்து தற்போது பார்ப்போம்.
சாப்பிடும் போது பெரும்பாலோர் செய்யும் தவறு பேசிக்கொண்டே சாப்பிடுவது. மூச்சுக்குழல் உணவுக்குழல் இரண்டும் வெவ்வேறு வால்வுகள், உணவு பொருளை மெல்லும் போது மூச்சுக்குழல் வழியே சுவாசிப்போம், மென்ற உணவை விழுங்கும் போது உணவுக் குழல் திறந்து கொள்ளும்
அந்த நேரத்தில் மூச்சு குழல் மூடிக்கொள்ளும், உணவு மூச்சு குழலில் செய்யாமல் இருக்க இயற்கை இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. நாம் பேசிக் கொண்டே சாப்பிட்டால் நமக்கு தெரியாமல் வாயின் வழியே காற்று உள்ளே செல்கிறது
ப்போது மென்ற உணவை விழுங்க முயலும் போது அதில் காற்று இருப்பதால் உணவு குழல், மூச்சுக் குழல் இரண்டும் ஒரே நேரத்தில் திறக்கின்றன. இதனால் உணவு குடலில் செல்ல வேண்டிய உணவு தவறி மூச்சுக் குழலில் செல்ல வாய்ப்பு இருக்கிறது
இதனால் தொண்டை அடைத்து மூச்சு திணறல் ஏற்படும் என்றும் எனவே சாப்பிடும் போது பேசக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.