Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளமையில் நரைமுடி பிரச்சனையா? இதோ ஒரு தீர்வு..!

Mahendran
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (19:05 IST)
தலைக்குச் சிறந்த அழகு முடிதான். கருமேனியாக இருப்பதற்கு வைட்டமின் B5 (பென்டோதெனிக் அமிலம்) முக்கியமானது. இது இல்லையெனில், இளநரை அதிகரிக்கலாம்.
 
அரிசி, கோதுமை, பருப்பு, கீரைகள், தக்காளி, பச்சைநிறக் காய்கறிகள், முந்திரி, பாதாம், பால், மீன், முட்டை போன்ற உணவுகளில் வைட்டமின் B5 அதிகம் உள்ளது. இது உணவில் உள்ள சத்துகளை ஆற்றலாக மாற்றி, முடியின் நிறம் மற்றும் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இளநரையை தடுக்கிறது.
 
கால்சியத்துடன் சேர்ந்து ‘கால்சியம் பென்டோதினேட்’ ஆக மாறி முடியின் கருமையை பேணுகிறது. இதனால், இளமையில் தலைமுடி நரைக்காமல் தடுப்பது சாத்தியமாகிறது.
 
மேலும் கைக்குத்தல் அரிசி, தீட்டப்படாத கோதுமை, கீரைகள், காளான், கேரட், காலி பிளவர், தக்காளி, உருளைக்கிழங்கு, ஓட்ஸ், பேரீச்சை, ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் போன்றவற்றிலும், ஆட்டு இறைச்சி, ஈரல், முட்டை, மீன் முதலிய அசைவ உணவுகளை அவ்வப்போது எடுத்து கொண்டால் இளநரையை தடுக்கலாம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்..!

தலையணை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்..!

பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?

பெண்களை அச்சுறுத்தும் எலும்புத் தேய்மானம்: தடுப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments