Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய்கறிகளை இப்படி சமைத்தால் தான் முழு சத்தும் கிடைக்கும்!

Vegetables
Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (20:03 IST)
காய்கறிகள் அதிகம் சாப்பிட்டால் எந்தவித நோயும் வராது என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கும் நிலையில் காய்கறியை சில வழிமுறைகளின்படி சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
காய்கறிகள் தற்போது ரசாயன உரங்களால் விளைவிக்கப்படுவதால் காய்கறிகளை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கழுவ வேண்டும். அப்போதுதான் அதன் தோலில் உள்ள பூச்சி மருந்துகளின் தாக்கம் விலகும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
காய்கறிகளை நறுக்கியதற்கு பிறகு கழுவ கூடாது என்பதும் நறுக்கியதற்கு முன்பே கழுவி விட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீர்சத்து மிகுந்த காய்கறிகலை ஐந்து நிமிடங்கள் மற்றும் வேக வைத்தால் போதுமானது
 
அதேபோல் காய்கறிகளை எண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் அதன் முழு சத்து கிடைக்காது. முட்டைக்கோஸ் தேங்காய் வெள்ளரிக்காய் தக்காளி கேரட் இவற்றை சமைக்காமல் பயன்படுத்தினால் அதிக சத்துக்கள் கிடைக்கும்
 
சமைக்க வேண்டிய காய்கறிகளை தேவையான அளவு தண்ணீரில் வேக வைத்து அதன் பின் அந்த தண்ணீரை வீணாக்காமல் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments