Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்களை பாதிக்கும் வெரிகோஸ் வெயின்ஸ்!

Advertiesment
Varicose Veins
, செவ்வாய், 19 ஜூலை 2022 (22:45 IST)
வெரிகோஸ் வெயின்ஸ் என்பது நரம்பு சுருட்டி கொள்ளும் ஒரு வகை நோய். இது ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. பெண்களுக்கு சுரக்கும் ஹார்மோன்கள் தான் இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. 30 வயதுக்கு மேல் 70 வயது வரை உள்ள பெண்களுக்கு இந்நோய் ஏற்படுகிறது. கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்சனை என்பது கால்களில் உள்ள நரம்புகள் புடைத்துக் கொள்வது.
 
இதயம் தான் உடல் உறுப்புக்கள் அத்தனைக்கும் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பு‌கிற முக்கிய இடம்னு எவ்லோருக்கும் தெரியும். இதற்கு கால் நரம்புகளில் உள்ள வால்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை பழுதடைந்தால் நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு, அவை கால்களிலேயே தங்கி விடும். தலை‌யி‌லிருந்து, கால் வரைக்கும் இந்த ரத்தத்தை கொண்டு போகும் ரத்தக் குழாய்களுக்கு வெயின்ஸ்னு பேர்.
 
அப்புறம் கார்பன் டை ஆக்ஸைடு கலந்த ரத்தத்தை மறுபடி இதயத்துக்கு கொண்டு வர்றதும் இதே வெயின்ஸ் தான். இப்படி ரத்தம் இதயத்துக்கு போக கால் தசைகளும் கூட பம்ப் மாதிரி உதவி செய்யும். அப்படிப் போகறப்ப, கால்களில் உள்ள நாளங்கள் வீங்கி, புடைச்சுக்கிறதாலயும் ரத்த நாளங்கள்ல உள்ள வால்வுகள் பலவீனமா இருந்தாலும் வெரிகோஸ் வெயின்ஸ் வரலாம்.
 
உடல்பருமன் உள்ளவங்க, கர்ப்பிணி பெண்கள், அதிலும் குறிப்பாக அதிக குழந்தைகள் பெறும் தாய்மார்கள், மெனோபாஸ் காலத்தை நெருங்குறவங்களுக்கு எல்லாம் இந்த பிரச்சனை இருக்கு.
 
பர‌ம்பரை ரீதியாகவும் குறிப்பிட்ட பெண்கள் இதனால பாதிக்கப்படறாங்க. இதை தடுப்பது மிகவும் கடினமானது. காரணம் மனிதர்கள் கால்களில் தானே நடக்கிறோம்? இருப்பினும் இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை சிலர் முன் கூட்டியே நடவடிக்கை எடுப்பதன் மூலம் தடுக்க முடியும்.
 
வருமுன் தவிர்க்கிறது தான் இதுக்கான முதல் அட்வைஸ். அதன்படி ஒவ்வொருத்தருக்கும் உடற்பயிற்சி ரெம்ப முக்கியம். தவிர உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், நீண்ட நேரம் நின்றபடியே பணிபுரிவதைத் தவிர்ப்பது, நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் உண்பது. கால்களில் எப்போதும் சாக்ஸ் மாதிரி அணிகின்ற கம்ப்ரஷன் ஸ்டாக்கிங்ஸ் உபயோகிக்கிறது நல்லது.
 
மேலும் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மருந்து கொடுத்து குணப்படுத்தலாம். முதலில் சுருண்ட நரம்புகளை முற்றிலுமாக பழைய நிலைக்குக் கொண்டு செல்லவோ, குணப்படுத்தவோ முடியாது.
 
ஊசி மூலம் குணப்படுத்துதல் ஸ்கெலரோதெரபி என்று பெயர். ஆனால் இந்த முறையை பின்பற்றினால் நீண்ட நாள் பின்பற்றவேண்டும். இடையில் நிறுத்தினால் முழுப் பயன் கிடைக்காது. அறுவை சிகிச்சை முறையிலும் இந்நோய் குணப்படுத்தலாம்.
 
பழுதடைந்த நரம்புகளில் லேசர் ஃபிளமென்ட் மூலம் அடைப்பது நவீன முறையாகும். இந்த சிகிச்சை முறையில் சில கெடு பலன்கள் உள்ளது. லேசர் சிகிச்சை மூலம் வெளியாகும் அதிகபட்ச வெப்பம், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.
 
ரேடியோ அலை சிகிச்சை (Radio Frequency Ablation RFA) இப்புதிய முறை பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. காரணம் இந்த சிகிச்சை முறையில் வலி மிகக் குறைந்த அளவில் இருக்கும். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறாமல், புறநோயாளிகளைப் போல சிகிச்சை பெற்றாலே போதும்.
 
பாதிக்கப்பட்ட பகுதியில் மரத்துப் போவதற்கான ஊசி செலுத்தப்படும். இந்த சிகிச்சை முறையால் ரத்த அடைப்பு ஏற்படுவதில்லை. மேலும் அருகிலுள்ள திசுக்களும் பாதிக்கப்படாது. அதிக வெப்பமும் வெளியேறுவதில்லை. பாதிக்கப்பட்ட நரம்புகள் மூடப்பட்டவுடன், அருகிலுள்ள ஆரோக்கியமான நரம்புகளில் ரத்தம் பாயத் தொடங்கும். இதனால் கால்கள் பழைய நிலைக்குத் திரும்பும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருந்தாகும் உணவு வகைகள் என்னென்ன?