Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்களுக்கு பிரச்சனை தரும் `ப்ராஸ்டேட் வீக்கம்'... குணமாக என்ன செய்ய வேண்டும்?

Mahendran
செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (18:59 IST)
ஆண்களுக்கு மட்டுமே காணப்படும் ஒரு முக்கியமான சுரப்பியாக 'ப்ராஸ்டேட்' அழைக்கப்படுகிறது. இதை தமிழில் 'சுக்கிலச் சுரப்பி' என்றும் கூறுவர். இது சுமார் பாதாம் விதையின் அளவில் ஒரு சிறிய சுரப்பி ஆகும். ஆண்களின் அடிவயிற்றில், மூத்திரப்பைக்கும் ஆணுறுப்புக்கும் இடையில் அமைந்திருக்கிறது.

சில ஆண்களுக்கு இந்த சுரப்பி படிப்படியாக பெரிதாகி வீங்கக்கூடும். இளம் வயதில் சிலருக்கு இது வீங்கி வலி ஏற்படுத்தலாம், பெரும்பாலும் சிறுநீர்ப்பை தொற்றுகளினால் ஏற்படும். சரியான மருத்துவ சிகிச்சை எடுத்தால் விரைவில் குணமடையும்.

நடுத்தர வயதுக்காரர்களில் சிலருக்கு இந்த சுரப்பி அளவில் அதிகரித்து வீங்கலாம். இதற்கும் தக்க சிகிச்சை எடுத்தால் விரைவில் சரியாகிவிடும். ஆனால் வயதான காலத்தில் ப்ராஸ்டேட் சுரப்பி மிகுந்த அளவில் வீங்கினால், அது அதிக தொந்தரவுகளை உருவாக்கும். சரியான நேரத்தில் கவனிக்காமல் விட்டுவிட்டால், சிலருக்கு இது புற்றுநோயாக மாறக்கூடும்.

இந்த பிரச்சனை காரணமாக தாம்பத்ய உறவில் திருப்தியின்மை, விரைவில் விந்து வெளியேறுதல், விறைப்புத்தன்மை குறைபாடு போன்ற  சிக்கல்கள் ஏற்படலாம்.

இந்த பிரச்சனையின் அறிகுறிகள் தொடர்ந்து இருப்பின், யூராலஜிஸ்ட் (மூத்திரக் குழாய் மற்றும் சிறுநீரகம் தொடர்பான மருத்துவர்) ஆலோசனை பெறுவது அவசியம். நோயின் நிலையைப் பொறுத்து, மருத்துவ சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சையா என்பதை மருத்துவர் தீர்மானிப்பார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிசேரியன் செய்த பெண்களுக்கு அடிக்கடி இடுப்புவலி வருமா?

நார்ச்சத்து அதிகம் இருக்கும் பேரிக்காய்.. சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்..!

முகத்தில் சரும துளைகள், கரும்புள்ளிகள் ஏற்பட என்ன காரணம்?

கண்களின் கருவளையத்தை நீக்க என்ன செய்ய வேண்டும்?

நீரிழிவு நோயாளிகளுக்கு கண்புரை நோய் வர வாய்ப்பு அதிகமா?

அடுத்த கட்டுரையில்
Show comments