தக்காளி அதிகம் சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகும் என்ற கருத்து பலரிடையே இருந்தாலும், மருத்துவ ரீதியாக இது கட்டுக்கதையே ஆகும்.
தக்காளி உலகளவில் அதிக மக்களால் உண்ணப்படும்போது, அது மட்டுமே கற்களை உருவாக்கினால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வேண்டும்.
இந்த கட்டுக்கதை உருவாகக் காரணம், சிறுநீரக கற்கள் உருவாக ஆக்சலேட்டுகள் காரணமாக இருப்பதுதான். தக்காளியில் ஆக்சலேட்டுகள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால், 100 கிராம் தக்காளியில் சுமார் 5 மில்லி கிராம் அளவே ஆக்சலேட்டுகள் உள்ளன. இந்த அளவு கற்களை உருவாக்கப் போதுமானதல்ல.
சிறுநீரகக் கற்கள் உருவாக முதன்மையான காரணிகள் இவைதான்:
நீரிழப்பு (Dehydration): உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமையே மிக முக்கியக் காரணம். தினமும் 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.
உடல்நலப் பிரச்சினைகள்: நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அல்லது சில அரிய வளர்சிதை மாற்றக் கோளாறுகள் (Oxalosis) காரணமாகவும் கற்கள் உருவாகலாம்.
யூரிக் அமிலக் கற்கள்: சிலருக்கு யூரிக் அமிலம் அதிகமாகச் சேர்வதால் கற்கள் உருவாகலாம். இவர்கள் மட்டுமே மீன், இறைச்சி போன்ற பியூரின் நிறைந்த உணவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
சிறுநீரகக் கற்களைத் தடுக்க, தக்காளியைக் குறைப்பதை விட, போதுமான தண்ணீர் குடிப்பது மற்றும் அடிப்படை நோய்களுக்குச் சிகிச்சை பெறுவதுமே முக்கியம்.