Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நன்னாரி: உடலைக் காக்கும் அற்புத மூலிகை - அதன் மருத்துவப் பயன்கள்!

Mahendran
புதன், 2 ஜூலை 2025 (22:08 IST)
நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட  நன்னாரி வேர், வெளிநாட்டினருக்கு எளிதில் கிடைக்காத அரிய பொக்கிஷம். ஆனால், தமிழ்நாட்டில் எங்கும் கிடைக்கும் இந்த அற்புத மூலிகையை நம்மில் பலர் அதன் அருமை தெரியாமல் பயன்படுத்துவதில்லை. அன்றாடம் நாம் பயன்படுத்த வேண்டிய மூலிகைகளில் இது மிகவும் முக்கியமான ஒன்று.
 
கொடி வகையைச் சேர்ந்த நன்னாரியின் வேர், சித்த, ஆயுர்வேத, மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நன்னாரி வேரை நீரில் போட்டுவைத்து, அந்த நீரை குடித்து வந்தால், உடல் வெப்பம் சமநிலைப்படும். இது குடிப்பதற்கு இதமாக இருப்பதுடன், சிறுநீர் போக்கை அதிகரித்து, இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தைத் தூய்மைப்படுத்தவும் உதவுகிறது.
 
கோடைக்காலம் வந்துவிட்டால் ஏற்படும் நா வறட்சியை தணிக்க நன்னாரி குடிநீர் மிக சிறந்தது. இது உடலின் உள் வெப்பத்தைத் தணித்து, உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது. ஒரு புதிய பானையில் சுத்தமான மெல்லிய துணியில் நன்னாரி வேரைக் கட்டி போட்டுவிட்டு, அந்த நீரைக் குடித்து வந்தால் உடல் நன்கு குளிர்ச்சி பெறும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேங்காய் எண்ணெயும் அரிசியும்: சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த புதிய வழி

நமது உணவின் இரகசியம்: புறக்கணிக்கப்படும் கறிவேப்பிலையின் முக்கியத்துவம்

உடல் பருமன் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை: பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள்? அசத்தல் தகவல்கள்..!

மண்டையோடு மற்றும் உச்சந்தலை மறுசீரமைப்புடன் அரிதான தோல் புற்றுக் கட்டிக்கு வெற்றிகர சிகிச்சை அளித்த சிம்ஸ் மருத்துவமனை

அடுத்த கட்டுரையில்
Show comments