இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்துவரும் நிலையில் நீரழிவு நோயாளிகள் உணவு கட்டுப்பாட்டை மட்டும் மேற்கொண்டால் அந்த நோயிலிருந்து விடுபட்டு விடலாம் என்று கூறப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக வாழைப்பூ வாழைத்தண்டு நெல்லிக்காய் வெந்தயம், பாகற்காய் கோவக்காய் கீரை வகைகள் ஆகியவற்றை உணவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்
மேலும் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் ஆகிய இரண்டையும் சம அளவில் வறுத்து எடுத்து பொடி செய்து தினமும் இரவு ஒரு ஸ்பூன் வெண்ணீரில் கலந்து சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் நடைப்பயிற்சி சைக்கிள் நீச்சல் பயிற்சி உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்றும் மன அழுத்தம் இல்லாமல் வாழ பழகிக் கொண்டால் நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம் என்றும் கூறப்படுகிறது.