Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேரிச்சையின் பலன்கள்

Advertiesment
Dates
, செவ்வாய், 14 ஜூன் 2022 (00:05 IST)
சத்துப் பொருட்களை எளிதில் பெற இயற்கை சில பல பொருட்களை நம்மிடத்தில் தந்துள்ளது. அதில் பேரிச்சை மிகவும் அற்புதமான ஒன்று. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப் பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் அவசியம் பேரீச்சை உண்ண வேண்டும்.
 
பே‌ரிச்சையின் பலன் : 
 
பேரிச்சையில் உள்ள நார்ச்சத்துக்கள் எளிதாக ஜீரணமாகும். உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. 
 
கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பே‌ரிச்சைக்கு உண்டு. பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பே‌ரிச்சைக்கு ஈடு இல்லை. 
 
டேனின்ஸ் எனும் ஆன்டி ஆக்ஸிடென்ட் பே‌ரிச்சையில் உள்ளது. இது நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது. 
‘வைட்டமின் ஏ’, பே‌ரிச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.
 
சிறந்த நோய் எதிர்ப் பொருள்களான லுடின், ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது. 
 
பே‌ரிச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பே‌ரிச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு‌ச் ச‌த்து உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹ‌ீமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்ததில் ஆக்சிஜனை சுமந்து செல்லும் ப்ளேட்ளெட்ஸ் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.
 
பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. இது இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. இதனால் ஏற்படும் பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது. 
 
இதில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதை தடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுகப்பிரசவம் சுலபமே!