Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சில உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடுவதினால் ஆண்மையை பறிக்கும் அபாயம் உள்ளதா?

Advertiesment
சில உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடுவதினால் ஆண்மையை பறிக்கும் அபாயம் உள்ளதா?
எல்லா உணவுப் பொருட்களையும் ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லதில்லை. தோசை மாவு, இன்றைய சமையலில் மீந்துபோன பழைய உணவுகள் இப்படிக் கையில் கிடைக்கிற பொருட்களை எல்லாம் ஃப்ரிட்ஜிற்குள் திணித்து விடாதீர்கள்.
 
 
காய்கறி, பழங்கள், முட்டை போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். ஆனால், அவை உணவாக  சமைக்கப்பட்ட பிறகு - அதாவது சமையலுக்குப் பின்பு ஃப்ரிட்ஜில் வைக்கப்படுவது நல்லதல்ல.
 
சில உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடுவதனால் விஷமாக மாறும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட உணவுகள்  எவை என்பதனையும், ஏன் சூடுபடுத்தி சாப்பிட கூடாது என்பதனையும் பற்றி பார்ப்போம். 
 
சில உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. அப்படி சப்பிட்டால் செரிமானக் கோளாறு, குடல் புண், இவ்வளவு ஏன்? ஆண்மை  குறைவு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 
புரதம் நிறைந்த சிக்கனை சூடுபடுத்தும்போது புரதம் மேலும் அதிகரிப்பதால் எளிதில் செரிக்காது. சிக்கனை சூடுபடுத்தி  சாப்பிடுவது தொடர்ந்தால் ஆண்மை குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 
இரும்புச் சத்தும் நைட்ரேட்டும் நிறைந்துள்ள கீரையை சூடுபடுத்தும்போது நைட்ரேட், நைட்ரைட்டாக மாறுவதால் புற்றுநோய்  ஏற்படும் அபாயம் உள்ளது.
 
புரதம் நிறைந்து காணப்படும் முட்டையை ஒரு முறை வேக வைத்துவிட்டால் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. 
 
ஒருமுறை சமைத்த உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்ற பொருள்களை ஃபிரிட்ஜில் வைத்து சிலர் சாப்பிடுவர். அவ்வாறு  சாப்பிடுவதால் ஆண்மை பறிபோகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊறவைத்த பாதாமில் உள்ள மருத்துவ பயன்கள்!