Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைத்து நலம் தரும் நல்லெண்ணெய்

இரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைத்து நலம் தரும் நல்லெண்ணெய்

Webdunia
எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் இதுதான். எள்ளில் வெள்ளை எள், கருப்பு எள், சிவப்பு எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.


 
 
1. நல்லெண்ணெய் சற்று கசப்பும், சிறிது இனிப்பும், காரத்தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது. நல்லெண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
 
2. இதன் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும். இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.
 
3. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும்  நீங்கும். நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, கண்ணுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு,  சொரி, சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது.
 
4. நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக  செயல்படுகிறது. இது உடலில் கொழுப்பு சத்தை குறைத்து உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது. 
 
5. நல்லெண்ணெயில் உள்ள துத்தநாகம்,  எலும்புகளை பலப்படுத்துகிறது. தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உடல் நலத்திற்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தையும்  போக்குகிறது.

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments