Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!

Advertiesment
வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
, புதன், 11 ஜூலை 2018 (16:36 IST)
சிறுதானியங்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்ப‍து இந்த‌ வரகு என்றால் அது மிகையாகாது
 
இதனை நம் முன்னோர்கள் அடிக்கடி சமைத்து சாப்பிட்டதால் தான், நோய்நொடி இன்றி நீண்ட ஆயுளுடன் திடகாத் திரமான உடல் ஆரோக்கியத்துடன் இருந்தனர். ஆனால் இன்று, நிலைமை தலைகீழ், நாகரீக உணவின் மீதும் நாட்ட‍ம்கொண்டு, கலப்ப‍ட  மற்றும் செயற்கை நிறப் பொடிகள், மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த, கெட்டுப்போன, ஆரோக்கியமற்ற‍ உணவுகளைத்தான் நாம் சாப்பிட்டு வருகிறோம்.
 
 நமது வாரிசுகள் நல்ல ஆரோக்கியமான திடகாத்திரமான உடலை பெற வேண்டாமா? அதற்கு நாம் செய்யவேண்டிய முதல்படி, நமது பாரம்பரிய உணவு முறையை குழந்தைகள் சாப்பிட பழக்க‍ வேண்டும். நமது பாரம்பரிய உணவுவகைகளில் தானிய வகைகள் சிறப்புக் குரியதாகும்.
 
வரகு தானியத்தை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் உண்டாகும்  நன்மைகள்:
 
1. அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது. கோடைக்காலத்தில் நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.
 
2. வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். 
 
3. ரத்தத்தில் அதிகளவு சேர்ந்துள்ள‍ ச‌ர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, மிதமான அளவுடன் பராமரிக்கிறது.
 
4. நடுவயது, முதிர்ந்த வயதினருக்கும்வரும் மூட்டுவலியைக் கட்டுப்படுத்தி , அவர்கள் ஓரளவு சுகத்தை தருகிறது.
 
5. கண்களில் ஏற்படவிருகும் நரம்புநோய்களைத் முற்றிலும் தடுக்கும் கேடயமாக செயல்பட்டு கண்களை காக்கிறது.
 
6. கல்லீரலின் செயல்பாடுகளைத்தூண்டிவிடுவதால், ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும். மேலும் நமது உடலில் சுரக்கும் நிணநீர் சுரப்பிகளைச் சீராக்குகிறது.
 
7. மாதவிடாய்கோளாறுகளால் அதிகளவு பாதிப்பைச் சந்திக்கும் பெண்கள் இந்த வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது. இரத்த‍ போக்கு சீரடையும், வயிற்று வலியும் குறையும் என்கிறார்கள் சித்த‍ மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாழை இலையில் சாப்பிடுவது புற்றுநோயைத் தடுக்குமா...?