Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயற்கையான முறையில் ஜீரண சக்தியை துரிதப்படுத்தும் புதினா!!!

இயற்கையான முறையில் ஜீரண சக்தியை துரிதப்படுத்தும் புதினா!!!

இயற்கையான முறையில் ஜீரண சக்தியை துரிதப்படுத்தும் புதினா!!!
1. இரத்த சோகை, மஞ்சள் காமாலை, வறட்டு இருமல், நரம்பு தளர்ச்சி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், புதினாவை தினமும் சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும். புத்துணர்வும் பசி உணர்வும் புதினாச்சாறு தரும்.


 
சூட்டுத்தன்மை தரும். எல்லாரும் தினமும் கொத்தமல்லி, கறிவேப்பிலை போல் இதையும் பயன்படுத்துகின்றனர். சமைக்காமல் சாறாகப் பயன்படுத்துகையில் நல்ல பலன்கள் பெறுகின்றனர். 
 
2. ஆஸ்துமா பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், புதினாவை சாப்பிட்டு வந்தால், அப்பிரச்சனை அகலும். உலர்ந்த புதினாக் கீரையைப் பொடிசெய்து பல் துலக்கினால் பல் தொடர்பான அனைத்து நோய்களும் உடனே குணமாகும். வயிற்று உப்புசத்திற்கும், நரம்புத்தளர்ச்சிக்கும், இசிவு நோய்க்கும் அரியமருந்து புதினாக் கீரையாகும்.
 
3. புதினாவை உலர வைத்து, பாலில் சேர்த்து கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமாவால் அவதியுறும் அன்பர்கள் உடனடி நிவாரணம் பெறுகின்றனர்.
 
4. தசை வலி, நரம்பு வலி, தலை வலி, மூட்டு வலி போன்றவற்றின் போது புதினாவை நீர்விடாமல் அரைத்து, வலியுள்ள இடத்தில் பற்று போட, வலி மாயமாய் மறைந்துவிடும்.
 
5. ஆண்கள் புதினாவை சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைவு ஏற்படுவதைத் தடுக்கலாம். ஒருவேளை ஆண்மை குறைவு இருந்தால், புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வர முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்க முடியும்.
 
6. பெண்கள் புதினாயை உணவில் சேர்த்து வந்தால், மாதவிலக்கு சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும். முகத்தில் பருக்கள் உள்ளவர்களும், வறண்ட தோல் உள்ளவர்களும் இரவில் படுக்கைக்குச் செல்லும் போது, புதினாக் கீரையைச் சாறாக்கி அதை உடலிலும், முகத்திலும் தடவிக் கொள்ள வேண்டும். காலையில் இரண்டு தேக்கரண்டி புதினாக்கீரைப் பொடியைத் தேன்கலந்து உட்கொள்ள வேண்டும் அல்லது தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும்.
 
7. புதினா அசைவ உணவுகள் மற்றும் கொழுப்புமிக்க உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்யும். மேலும் குடலியக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும். உணவு உடனே செரிமானம் ஆகும். ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றில் தேனையும் எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு முன்பாக அருந்தினால் அனைத்து மருத்துவ நன்மைகளும் கிடைக்கும்.
 
8. புதினாவை உணவில் சேர்ப்பதால், நம் உடலில் உள்ள இரத்தத்தில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் மற்றும் அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, இரத்தம் சுத்தமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொடுகு நீங்க இயற்கையின் வரப்பிரசாதம் பொடுதலை!!!!