Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெண்டைக்காயின் மருத்துவ குணநலன்கள்

Lady Finger
, வியாழன், 21 ஏப்ரல் 2022 (23:19 IST)
இயற்கையில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் உடலுக்கு மிகவும் சத்தானவை. காய்கறிகளில் குறிப்பாக வெண்டைக்காயில் மருத்துவ குணநலன்கள் நிறைந்து காணப்படுகிறது. வெண்டைக்காயில் உள்ள கொழகொழப்பு பிடிக்காமலே பலரும் அதை சேர்த்துக் கொள்ளவதில்லை. உண்மையிலே அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன.
 
 
நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து வெண்டைக்காயில் அதிகம் உள்ளது. அதனால் உடலில் நீர் இழப்பை தடுத்து எப்போதும்  குளுமையாக வைக்கிறது.
 
வெண்டைக்காயில் உள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதன் மூலம் இதய நோய்கள்  வருவதற்கான ஆபத்தை குறைக்கின்றது.
 
வெண்டைக்காயில் உள்ள பெகடின் என்ற நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்துவிடுகின்றன. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது.
 
இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.
 
வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தீர்ப்பதுடன் குடல் புண்ணை குணமாக்கும் திறன் கொண்டது. தோலில்  ஏற்படும் வறட்சித்தன்மையை வெண்டைக்காய் குணமாக்குகிறது.
 
வெண்டைக்காயை பொடியாக நறுக்கி வதக்கி குழந்தைகளுக்கு சாப்பிட வைத்தால் அவர்களின் நினைவாற்றல் பெருகும்.
 
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது உஷ்ணம் காரணமாக ஏற்படும் வயிறு வலி நீங்க 2 முதல் 5 கிராம் அளவிற்கு  வெண்டைக்காய் விதைகளை சாப்பிட வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணையம் தொடர்பான நோய்களுக்கும் மருந்தாகும் சுண்டைக்காய்