Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ குணம் நிறைந்த அன்னாசிப்பழம்!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (00:50 IST)
அன்னாசி பழத்தில் வைட்டமின் 'பி' உள்ளதால் உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது.
 
நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால்  பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும்  வெள்ளை நோய் குணமாகும்.
 
அன்னாசி பழச்சாறு சிறுநீர் கழிவை தூண்டி, விஷம் மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகங்கள் சிறப்பாகச்  செயல்பட உதவும்.
 
அன்னாசிப் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஒரு பக்க தலைவலி, மாலைக்கண் நோய், கண் பார்வை மங்கல், கண் உறுத்தல், காது வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவதில் இருந்து விடுபடலாம். மேலும், அன்னாசிப் பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
 
அன்னாசிப் பழம் குடலில் உள்ள கெட்ட கிருமிகள் மற்றும் புழுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது. இதில், கால்சியம் உள்ளதால் பற்கள், எலும்புகளை உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல அன்னாசிப் பழம் சளி மற்றும் காய்ச்சலைக் கூட குணப்படுத்த வல்லது. வயிறு தொடர்பான பிரச்சனைகளைக் கூட சரி செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மல்லிகைப்பூவின் மருத்துவப் பயன்கள்: அழகு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் உதவும்!

குழந்தைகளின் காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள்: கவனிக்க வேண்டியவை என்ன?

சூரியனை விட்டு விலகும் பூமி! இன்று முதல் நமது உடலில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன?

குழந்தைகளின் காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள்: கவனிக்க வேண்டியவை என்ன?

கொத்தவரங்காயின் ஆரோக்கிய நன்மைகள்: தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம்

அடுத்த கட்டுரையில்
Show comments