Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவை மட்டுமல்ல மருத்துவ குணமும் நிறைந்த மாம்பழம்...

சுவை மட்டுமல்ல மருத்துவ குணமும் நிறைந்த மாம்பழம்...
, திங்கள், 30 ஏப்ரல் 2018 (13:06 IST)
முக்கனியில் ஒன்றான மாம்பழம், இந்தியாவில் ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிக அளவில் விளைகிறது. 
 
மாம்பழம் சுவைக்காக மட்டுமல்லாமல், அதில் உள்ள பல மருத்துவ நன்மைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் சில பின்வருமாறு.... 
 
# மாம்பழத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு குறைந்தே காணப்படுகிறது. இதில் மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது.
 
# மாம்பழம் புற்றுநோய், குடல் இறக்கம், இருதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து. 
 
# மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், நல்ல தூக்கம் வரும் நரம்பு தளர்ச்சியை போக்கும், பித்தம், மயக்கம், தலைவலியை தீர்க்கும். 
 
# 150 கிராம் மாம்பழத்தில் 86 கலோரிகள் அடங்கியுள்ளன. உடல் எடையை அதிகரிக்க மாம்பழம் சாப்பிடலாம். 
 
# மாம்பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும். 
 
# செரிமானமின்மை மற்றும் அமிலத்தன்மையினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது மாம்பழம். 
 
# மாம்பழங்களில் அதிக அளவு பீட்டா கரோட்டீன் மற்றும் காரோட்டினாய்டு உள்ளது. இது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலிமைப்படுத்த உதவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினமும் ஒரு வெள்ளரிக்காய்