Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாழை இலையில் சாப்பிடுவதில் இத்தனை நன்மைகளா?

வாழை இலையில் சாப்பிடுவதில் இத்தனை நன்மைகளா?
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (13:08 IST)
நமது முன்னோர்கள் பாரம்பரியமாக பயன்படுத்திவந்த வாழை இலையின் மருத்துவ குணங்கள் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.


 


நாகரீகம் வளர வளர எராளமான நல்ல விஷயங்களை நாம் பயன்படுத்துவதை விட்டு விட்டோம் அல்லது மறந்துவிட்டோம்.  முக்கியமாக, நமது முன்னோர்கள் பின்பற்றிவந்த பல முக்கியமான இன்றியமையாத பழக்கங்களைக் கூட தவிர்த்துவிட்டோம். அதில் முக்கியமானது வாழை இலை.

தற்போது, இரும்பு, பீங்கான் போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட தட்டில் உணவை அருந்த பழகிவிட்டோம். ஆனால், நமது முன்னோர்கள் வாழை இலையில்தான் உணவை அருந்தி வந்தனர்.

முதலில் வாழை இழை என்பது ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ killer) என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புரிகிற மாதிரி கூறினால், அது ஒரு நல்ல கிரிமிநாசினி என்று அழைக்கலாம்.  சுடச்சுட உணவை வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்னால், எண்ணெய் விளக்கு மூலமாகத்தான் பெண்கள் வீட்டில், முக்கியமாக இரவில் சமைத்து வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சமைக்கும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அவ்வளவு மருத்துவ பலன் வாய்ந்தது வாழை இலை.

தற்போது நாம் பயன்படுத்தும் தட்டுகளை சுத்தமாக கழுவி வைக்கிறோம். விலை உயர்ந்த தட்டுகளை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனாலும், நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் ஏராளமான நோய்கள் வருகின்றன. ஆனால், அந்த காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அவரை அனைவரும் வாழை இலையில்தான் உணவு அருந்தினர். ஆனால், தற்போது போல் அதிக நோய்கள் அவர்களை தாக்கவில்லை. அதற்கு காரணம் இந்த வாழை இலை.

நாம், வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் ஆரோக்கியமாகும். நம் உடலில் உள்ள மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. மேலும், நன்கு பசியைத் தூண்டும். வாழை இலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அடுத்த பக்கம் பார்க்க...

உணவு அருந்த மட்டுமல்ல. வாழை இலையில் ஏராளமான மருத்துவ பலன்கள் உண்டு. தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும். இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

தமிழன் காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன். வாழை இலை சிறந்த நச்சு முறிப்பான் என்பதால்தான்  எராளமான இடங்களில் வாழை மரத்தை தமிழன் நட்டு வளர்த்தான். முக்கியமாக, சுப காரியங்கள் எது நடந்தாலும் அங்கு வாழை மரங்கள் கட்டப்படுவதை நாம் பார்த்திருப்போம். திருமண பந்தல், கோவில் திருவிழா என எல்லா இடத்திலும் வாழை மரம் கட்டப்பட்டிருக்கும்.

ஆனால் வாழை இலை என்பது தற்போது சுபகாரியங்கள் நடைபெறும்போது மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. காரணம் அதன் மருத்துவ பலன்கள் யாருக்கும் தெரிவதில்லை. பொங்கல், அமாவாசை போன்ற நாட்களில் மட்டும், தெய்வ வழிபாட்டுக்காக, நாம் தயாரிக்கும் உணவு பொருட்களை வாழை இலையில் வைத்து அருந்துகிறோம்.

அவ்வளவுதான் மற்ற நாட்களில் நமக்கு வாழை இலை நினைவிற்கே வருவது இல்லை. அப்படி இல்லாமல், அன்றாடம் நாம் உணவு அருந்த வாழை இலையை பயன்படுத்த வேண்டும். வீட்டில் மட்டுமல்ல, அலுவலகம் செல்பவர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என அனைவரும் மதிய உணவுக்கு வாழை இலையை பயன்படுத்தலாம்.

நாகரீகம் வளர வளர நல்ல விஷயங்களை நாம் தவிர்த்து வருகிறோம் என்பதை உணரவேண்டும். நம்முடைய குழந்தைகளுக்கு வாழை இலையில் உணவு அருந்த நாம் சொல்லித்தர வேண்டும். வாழை இலையில் உணவு எடுத்து சென்றால் அந்த உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். திருமண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள்தான் பெரிதும் பயன்படுகின்றன.

எனவே நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வாழை இலையின் சிறப்பை புரிந்து கொள்வேம். உணவு அருந்த வாழை இலையை பயன்படுத்துவோம். நம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதை வாழை இலை மூலம் நாம் உறுதி செய்வோம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காய்கறி மற்றும் கீரைகளின் சத்துக்கள் அழியாமல் சமைப்பது எப்படி