Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்கள் கொலுசு அணிவதில் ஓர் அறிவியல் காரணம்....

பெண்கள் கொலுசு அணிவதில் ஓர் அறிவியல் காரணம்....
பாரம்பரியமாகவே நகைகள் அணிவது என்பது முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தங்கள், வெள்ளி நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டிவிடப்பட்டு நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்க உதவுகிறது என்றும் கூறப்படுகிறது.

 
இந்தியாவில் வெள்ளிக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகம். வெள்ளி நகைளை அணிவதால் ஆயுள் விருத்தியாகும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. நகை ஒவ்வாமை போன்ற உபாதைகள் வெள்ளியால் வருவதில்லையாம்.
 
பழங்காலத்தில் பெண்கள் காலில் காப்பு, தண்டை, சிலம்பு போன்ற தடிமனான அணிகலன்களை அணிந்து வந்தனர். இன்றும் மலை சாதி மக்கள் (ராஜஸ்தான்) அதிக எடையுள்ள காப்பு போல் தடிமனான வெள்ளி கொலுசை அணிகிறார்கள். பழங்காலத்தில் மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு என பல வடிவமைப்புகளில் கொலுசு அணிந்துள்ளார்கள்.
 
நகைகள் என்பது நம் மூதாதையர்கள் காலத்தில் இருந்து மிக முக்கியம் வாய்ந்தவையாக கருதப்பட்டு வந்துள்ளது. பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணிவதில்லை என கூறப்படுவதுண்டு. வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும்.
 
வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.
 
தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்றவற்றில்) நாம் நகை அணிதல் நல்லது. பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை.
 
சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்து விடுகின்றோம். குழந்தைக்கு நடக்கும்போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும் குடும்பத்தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது. வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி ஆரோக்கியமளிக்கிறது. பொதுவாகவே ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக காணப்படும். இதற்கு அவர்களது உடல்கூறு தான் காரணம். இதற்காக தான் சிறுவயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு கொலுசு அணிவிக்கப்படுகிறது.
 
உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை உறுதிப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’தீபாவளி வரலாற்றை தோற்றவர்கள் எழுத வேண்டும்’ - புது சர்ச்சை