Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு சில எளிய வழிமுறைகள்..!

Mahendran
திங்கள், 19 மே 2025 (18:30 IST)
உடல் பயிற்சி அனைவருக்கும் அவசியம். சீரான உடல் நலம், மன உறுதி, மற்றும் சுறுசுறுப்பான வாழ்கை பெற வேண்டுமானால் தினமும் உடல் இயக்கங்கள் வேண்டும். குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு பிள்ளைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்கள், தினமும் உடற்பயிற்சி தவிர்க்கக்கூடாது. வீட்டு வேலை, பிள்ளைகள் பராமரிப்பு போன்ற பணி நிறைந்த பெண்கள் “நேரம் இல்லை” என நினைக்கிறார்கள். ஆனால் அத்தகையவர்கள் கூட குறைந்தது 2 வகையான பயிற்சிகளை வாரத்தில் செய்ய முயல்வது நல்லது.
 
ஆரோக்கியத்துக்காக நாளும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடல் இயக்கத்தில் ஈடுபட பரிந்துரைக்கப்படுகிறது. நடைபயிற்சி மிக எளிதானதும் பயனுள்ளதாகவும் இருக்கும். நாளுக்கு 45 நிமிடம் வரை வேகமாக நடைபயிற்சி செய்தால், இதயம் வலிமை பெற்று மனமும் அமைதியாக இருக்கும். வாரத்திற்கு குறைந்தது 4 நாட்கள் நடைபயிற்சி முக்கியம்.
 
பல பெண்கள் எடை தூக்கும் பயிற்சிகளை செய்கின்றனர்.  இது தசைகளை வலுப்படுத்தும் முக்கிய பயிற்சி ஆகும். வாரத்தில் 2-3 முறை எடைபயிற்சி செய்தால் உடல் நிலை மேம்படும். ஆரம்பத்தில் எளிதான எடைகளை கொண்டு தொடங்கி, பின்னர் அதிகரிக்கலாம்.
 
பெண்கள் முழு நேரம் உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. காலை, மாலை, மற்றும் இரவு 10 நிமிடங்கள் மூலமாக மொத்தம் 30 நிமிடங்கள் உடலை இயக்கினால் போதும். 3-3-3 விதியை பின்பற்றலாம்: மூன்று பயிற்சிகள், மூன்று செட், மூன்று முறை செய்யும் முறையே இது. இந்த பழக்கம் உடல் ஆரோக்கியத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும்.
 
வீட்டிலோ அல்லது அருகிலுள்ள உடற்பயிற்சி மையங்களில் பெண்கள் எடைபயிற்சிகளை மேற்கொள்ளலாம். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

அடிக்கடி முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ ஒரு சுலபமான தீர்வு..!

கண்களில் கருவளையமா? கவலை வேண்டாம்.. இதோ தீர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments