Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தானியங்களை முளைகட்டுவது எப்படி...

Sprouted Cereals
, ஞாயிறு, 26 ஜூன் 2022 (01:03 IST)
தானியங்கள் மற்றும் பயறு வகைகளை அப்படியே உட்கொள்வதை விட அவைகளை முளை கட்ட வைத்து அதிலிருந்து தோன்றும் சிறு முளைகளின் மூலமாக வெளிப்படும் சக்தியை உட்கொள்வதனால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அதிகப்படியான உயிர் சக்தியை மிக எளிதாக பெறமுடியும்.
 
 
முக்கியமாக இது போன்ற முளை கட்டிய பயிறுகளிலிருந்து வைட்டமின் ‘சி’ என்ற உயிர் சத்து மிக அதிக அளவில் பெற முடியும். இவைகள் சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் மிக எளிதில்  ஜீரணமாகும். 
 
ஒருவரின் வாழ்நாளை நீட்டிக்கக்கூடிய தன்மைகொண்ட என்சைம்ஸ், முளைவிட்ட தானியத்தில் மிக அதிகமாக உள்ளது. உடல் தளர்ந்துபோன நிலையில், என்சைம்ஸ் நிறைந்த முளைவிட்ட பயிரைச் சாப்பிடும்போது புத்துணர்ச்சி பிறக்கிறது.  முளைவிட்ட தானியங்கள் மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரம் என்று சொல்லலாம்.
 
இந்த முளை கட்டிய தானியத்தில் இருந்து தானியக் கஞ்சி, தோசை, அடை போன்ற உணவுகளையும் தயாரித்து சாப்பிடலாம்.  இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன், வைட்டமின் ஏ, பி1, பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.
 
முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். நோய்களைத் தீர்ப்பது மட்டுமல்ல, எந்தவித  நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு. முக்கியமாக இது போன்ற முளை  கட்டிய பயிறுகளிலிருந்து வைட்டமின் சி என்ற உயிர் சத்து மிக அதிக அளவில் பெற முடியும்.
 
முளை கட்டும் விதம்:
 
முளை கட்டுவதும் மிகவும் சுலபம், எந்த வகை தானியமாக இருந்தாலும் அதை நன்கு கழுவி இரவு முழுவதும் கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைக்க வேண்டும்.அடுத்த நாளைக்கு ஒரு மெல்லிய துணியில் ஊறிய  தானியங்களை கட்டி சூரிய ஓளி படுப்படியான நல்ல காற்றோட்டமான இடத்தில் தொங்கவிட்டால் குறைந்தது எட்டு மணிநேரத்தில் அதிலிருந்து புதிய முளைகள் தோன்ற ஆரம்பிக்கும். சில தானியங்கள் முளை விட அதிக நேரம் எடுக்கும், அதுவரை போதுமான தண்ணீரை தெளித்து வர வேண்டும் இல்லாவிடில் தானியம் காய்ந்துவிடும். அல்லது அழுகி விடும். இவ்வாறு முளைவிட்ட தானியங்கள் மற்றும் பயறு வகைகளை இதை அப்படியே பச்சையாக சாலட்டாக செய்து சாப்பிடலாம் அல்லது வேகவைத்தும் பிடித்த விதத்தில் செய்து சாப்பிடலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இஞ்சியின் அற்புத மருத்துவம்