Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பன்றிக்காய்ச்சலில் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம்....

பன்றிக்காய்ச்சலில் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம்....
இந்தக் காய்ச்சல் முதன்முதலில் பன்றிகளிடம் அதிகளவு காணப்பட்டதால் இதற்கு அந்தப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ், பன்றிகள் மூலமாக மனிதர்களைத் தாக்கினாலும், பிறகு பாதிக்கப்பட்ட நபரின் சளி, இருமல், தும்மல் மூலமாக சக மனிதர்களுக்குப் பரவும்.

 
பன்றிக்காய்ச்சலில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள்......

1. பொது இடங்களில் இருமல், மற்றும் தும்மல் வரும்போது மற்றவர்கள் மேல் படாதவாறு ஒரு துணி, கர்சீப் பயன்படுத்த  வேண்டும்.
 
2. நாம் பயன்படுத்திய துணி, கர்சீப், டிஷூ பேப்பரை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். ஒரே துணி மற்றும் கர்சீப்பை பல  நாட்கள் பயன்படுத்துவதும் தவறு. அவற்றை வெந்நீரில் கொதிக்க வைத்தப்பின் தான் மறுபடியும் பயன்படுத்த வேண்டும்.
 
3. ஒரே வீட்டில் உள்ள நபர்கள், அவர்களுக்கென்று தனித்தனியாக டவல், கர்சீப், சோப்புகளை பயன்படுத்த வேண்டும்.  குழந்தைகளை கையாளும் முன்னர், கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
 
4. யாருக்காவது சற்று அதிகமாக சளி, இருமல் இருப்பின் அவர்களுக்கு அருகில் நீண்ட நேரம் இருக்கக்கூடாது.
 
5. குழந்தைகளுக்கு இந்த காய்ச்சலின் அறிகுறி இருந்தால், அவர்களை பள்ளிக்கூடங்களுக்கு 5 நாட்கள் வரை அனுப்புவதை  தவிர்க்கவேண்டும்.
 
6. மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு செல்வதை  குறைத்துக்கொள்ள வேண்டும். (கோவில்கள், திரை அரங்குகள் , மார்கெட்,  நெடுந்தூர இரயில் பயணங்கள், பேருந்து பயணங்கள் போன்றவை).
 
முதலாவது மற்றும் முக்கியமானது, முழுமையான ஓய்வு பிறகு தங்குமிடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல். பயன்படுத்திய கர்சீப், துணிகளை முறையாக அப்புறப்படுத்துதல், அதிகளவு தண்ணீர் குடித்தல் (2, 3 லிட்டர்). எளிதில் ஜீரணிக்க  கூடிய உணவுகளை உண்ணுதல் போன்றவையே 99%பன்றிக்காய்ச்சலை குணப்படுத்திவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே வாரத்தில் வழுக்கை தலையில் முடி வளர ஓர் அற்புத இயற்கை மருத்துவம்!