சர்க்கரை அளவை எப்படி கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள வேண்டுமோ, அதே போல் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் பல ஆபத்திலிருந்து தப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. ரத்த அழுத்தத்தை தவிர்க்க 4 விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
முதலாவது, தவறான உணவு பழக்க வழக்கங்கள். இதன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது, ஆரோக்கியமான உணவுகளை தவிர்ப்பது ஆகியவை தான் ரத்த அழுத்தத்திற்கு காரணம். புரதங்கள் அதிகம் கொண்ட உணவுகளை கண்டிப்பாக தினசரி சாப்பிட வேண்டும். அதேபோல், காய்கறிகள் மற்றும் பழங்களும் சாப்பிட வேண்டியது அவசியம்.
இரண்டாவதாக, தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி என்பது கட்டாயம். அதற்கு மேல் நடைபயிற்சி செய்தாலும் நல்லது. இதன் காரணமாக இதயத்தை சீராக பம்ப் செய்ய உதவும்.
மூன்றாவதாக, உடல் எடையை சீராக வைத்திருப்பது. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். எனவே, உடல் எடையை மெயின்டன் செய்ய வேண்டும்.
நான்காவது, மன அழுத்தம், இதுதான் ரத்த அழுத்தத்திற்கு மிகவும் முக்கிய காரணம். தேவையற்ற சிந்தனைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதால், எப்போதும் என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மையுடன் சந்தோசமாக இருக்க வேண்டும்.