Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைராய்டு பிரச்சனைக்கு பொதுவான வீட்டு கைவைதியம்!

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (12:33 IST)
தைராய்டு பிரச்சனைக்கு பொதுவாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி அதன் தாக்கத்தை குறைக்கலாம் என தெரிந்துக்கொள்ளுங்கள்...
 
வெங்காயம்:
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், இரவில் தூங்குவதற்கு முன் சிவப்பு வெங்காயத்தை பாதியாக வெட்டி, அதன் சாற்றினை எடுத்து கழுத்துப் பகுதியில் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.
 
இப்படி செய்து வந்தால், தைராய்டு சுரப்பியின் செயல்பாடு தூண்டப்படுவதோடு, அது சீரான அளவில் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
 
பசலைக்கீரை: 
பசலைக் கீரைச் சாறு (100 மிலி) மற்றும் இஞ்சிச் சாறு (100 மிலி) ஆகியவற்றில் 100 கிராம் கொள்ளை ஊற வைத்து பிறகு காய வைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். இதில் தினமும் 2 ஸ்பூன் எடுத்து சிறிய வெங்காயம் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் தைராய்டு நோய்கள் குணமாகும்.
 
சௌசௌ: 
தைராய்டு கோளாரால் அவதி படுபவர்கள் சௌசௌவை பயன்படுத்தலாம். சௌசௌவில் காணப்படும் காப்பர், மாங்கனீசு, தைராய்டு நோயால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இதை உணவில் எடுத்துக்கொண்டால் தைராய்டு கோளாறு நீங்கும்.
 
இந்துப்பு:
தைராய்டு பிரச்னைக்கு இந்துப்பு மிகவும் நல்லது. இதில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு உள்ளது. எனவே இந்துப்பை சமையலில் சேர்த்து வந்தால் தைராய்டு பிரச்னை சரியாகும்.
 
ரோஸ்மேரி ஆயில்:
சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெயை நீர் நிரப்பிய குளியல் டப்பில் சேர்த்து கலந்து, அதனுள் 15-20 நிமிடம் உட்கார வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் விரைவில் ஹைப்போ தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். 
 
தேங்காய் எண்ணெய்:
தினமும் 1-2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் தேங்காய் எண்ணெயை சூடேற்றக்கூடாது. இதனால் அதில் உள்ள கொழுப்பு அமிலங்கள், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, ஹைப்போ தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments