Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்ட உணர்வு கொடுக்கும் இஞ்சி; உடல் நலத்திற்கு நல்லதா?

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (13:03 IST)
இஞ்சி காட்டமான அல்லது காரத்தன்மை உணர்வை நமக்கு கொடுத்தாலும் அது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. 
 
இஞ்சிப் சாறு குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாகும். சளியை ஒழித்து விடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைத்துவிடும்.
 
இஞ்சியை சாறு எடுத்து, அதில் தேன் கலந்து குடித்து வந்தால் செரிமான மண்டலத்தை சீராக செயல்பட முடியாமல், நிலைமை மிகவும் மோசமாக உள்ளதை சரிசெய்ய முடியும்.
 
இஞ்சியை சாறாக்கி காலையில் குடிக்க வேண்டும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வத்திருந்தால் அடியிலவண்டல் படியும். அதை அப்பிடியே விட்டுட்டு மேல தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும். 
 
காலையில் வெறும் வயித்துல குடிச்சா நல்லது. வெறுமனேயும் குடிக்கலாம், தேன் சேர்த்தும் குடிக்கலாம். டீ ப்போட்டும் குடிக்கலாம். இப்பிடி குடிக்கிறதுனால அஜீரணக்கோளாறு சரியாகும்.
 
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
 
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து, காலையில் ஒரு கரண்டி வீதம், ஒரு வாரம் குடித்துவர, நீரிழிவு குறையும்.
 
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர, தொடக்கத்தில் உள்ள ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments