Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காளான் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகளை செய்யும் தெரியுமா??

Advertiesment
காளான் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகளை செய்யும் தெரியுமா??
, புதன், 30 செப்டம்பர் 2020 (13:16 IST)
காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. 
 
# காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.  
 
# காளான் உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு  சீராக செயல்படுகிறது.  
 
# இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான்.
  
# காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். 
 
# காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத் தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.  
 
# தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக கண்டுபிடித்துள்ளனர். 
 
# காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத்  தவிர்ப்பது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடிக்கடி கார்ன் சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடா?