Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

Webdunia
குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது  உங்களுக்கு தெரியுமா? பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை.
இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட்கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
 
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும். இதைவிட சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப்பட்டவையாகவும் இருக்கலாம்.
 
பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம்  பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச் சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.
 
சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.
 
சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.
 
கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட்அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.
லோ இன் கலோரிஸ் என்று பல பிஸ்கட் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது. எனவே பிஸ்கட்டைலோ கலோரி உணவு எனக் குறிப்பிடுவதே தவறு.
 
பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே இதைச்  சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments