Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புற்றுநோய் வருவதை தடுக்கும் ஆற்றல் கொண்ட திராட்சை விதைகள்!!

புற்றுநோய் வருவதை தடுக்கும் ஆற்றல் கொண்ட திராட்சை விதைகள்!!

புற்றுநோய் வருவதை தடுக்கும் ஆற்றல் கொண்ட திராட்சை விதைகள்!!
திராட்சை விதைகளில் புரோ ஆன்தோ சயனிடின் 80 உள்ளது. அதே போல் நாம் உண்ணுகின்ற மற்ற பழங்களிலும், காய்கறிகளிலும், தேநீரிலும் கூட இச்சத்து உள்ளது.
 
* திராட்சை விதைகளின் சத்தில் எவ்விதமான பக்கவிளைவுகளும் கிடையாது. உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின்-இ பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் இ சத்தை விட திராட்சை விதை ஐம்பது விழுக்காடு அதிக சக்தி கொண்டது.
 
* உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றிப் புத்துணர்ச்சி தரக்கூடிய ஆன்டிஆக்சிடன்ட் இதில் அதிகம் உள்ளது.  மேலும், புற்றுநோய் செல்களை அழித்து, புதிய ஆரோக்கியமான செல்கள் அதிக அளவில் உற்பத்தியாக உதவுகிறது. திராட்சைப் பழத்துடன் விதைகளைச் சேர்த்து உண்பது நல்ல பலனைத் தரும். 
 
* ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதன் விதைகளை உண்டு வந்தால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மலச்சிக்கலுக்கும், மூலத்துக்கும் நல்ல மருந்து. மேலும், ரத்த அழுத்தத்தைக் குறைத்து ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும்.
 
* வைட்டமின்-சியை விட இருபது மடங்கு சக்தியுள்ளது. ரத்தக் கொதிப்பு நோய்க்கு அருமருந்தாகப் பயன்படுகிறது. ரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை திராட்சைப் பழவிதை குறைக்கிறது.
 
* ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப் படுத்துகிறது.
 
* ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டி ராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளி களுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது.
 
* சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது. மாலைக்கண் நோய் நீக்கி கண்களில் ஒளியைத் தருகிறது. 
 
* பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது. நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. வயதான நாட்களில் ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!