Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்லருக்கு போகாமல் முகத்தை பொலிவாக வைத்து கொள்வது எப்படி? எளிய ஆலோசனைகள்..!

Mahendran
புதன், 21 மே 2025 (18:08 IST)
மாதம் மாதம் பார்லருக்கு போய் முகத்தை ஜொலிக்க வைக்க பல பெண்கள் ரூபாய் நூற்றுக்கணக்கில் செலவு செய்கிறார்கள். ஆனால் அதற்காக வெளி செல்ல வேண்டிய அவசியமே இல்லை. வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய சிறந்த வழிமுறைகள் இருக்கிறது. அதுதான் கோதுமை மாவு.
 
சப்பாத்தி, பூரி மட்டும் இல்லாமல், கோதுமை மாவு மூலம் உங்கள் முகம், கழுத்து, கைகளை பொலிவூட்டவும் முடியும். அதற்கான செய்முறை இதோ:
 
ஒரு சின்ன பாத்திரத்தில் 3 ஸ்பூன் கோதுமை மாவு, 1 ஸ்பூன் பசும்பால், அரை ஸ்பூன் தேன், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் மாதிரி கலக்கவும்.
 
முதலில் பசும்பாலால் முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். பிறகு, கண் பகுதிகளை தவிர்த்து, முகம் மற்றும் கழுத்தில் கீழிருந்து மேலே அப்ளை செய்யவும். மெதுவாக மசாஜ் செய்யும் போது, இறந்த செல்கள் வெளியேறும், ரத்த ஓட்டமும் சிறந்ததாகும்.
 
பத்து நிமிடங்கள் காயவிடுங்கள். ஆனால் மிகவும் காய்ந்துவிட கூடாது. அதன் பிறகு, வெதுவெதுப்பான நீரால் மென்மையாக கழுவி, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் தடவுங்கள்.
 
இதனால் முகம் இயற்கையான பிரகாசத்துடன் பளபளக்கும்!
 
இது உங்கள் இயற்கையான பார்லர் அனுபவம் – அதுவும் உங்கள் வீட்டிலேயே!
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு சில எளிய வழிமுறைகள்..!

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments