அலுவலகம், கல்லூரி, வீடு என எங்கும் கணினி, மொபைல் பயன்படுத்துவது எங்கள் நாளை முழுமையாக ஆக்கி இருக்கிறது. இதன் விளைவாக பலருக்கும் “கண் உலர்ச்சி” என்ற பிரச்சனை உருவாகிறது.
இதில் கண் எரிச்சல், சிவப்பாக மாறுதல், அரிப்பு, மற்றும் பார்வையில் சிரமம் போன்றவை ஏற்படலாம். இது பொதுவாக கண்ணீர் குறைவாக உற்பத்தியாகும் அல்லது வேகமாக ஆவியாகி விடுவதால் ஏற்படுகிறது. குறிப்பாக, ஏசி அறையில் நீண்ட நேரம் இருப்பது, டிஜிட்டல் திரையை தொடர்ந்த நேரம் பார்ப்பது, வெளிச்சம் சரியாக இல்லாததும் காரணமாகலாம்.
மேலும் ஹார்மோன் மாற்றங்கள், வயது மூப்புக்காலம், அலர்ஜி போன்ற மருத்துவ காரணங்களும் இதில் பங்கு வகிக்கின்றன. இந்த நிலை நீண்ட நாட்கள் தொடருமானால், கண்களில் தாங்க முடியாத வலி, பார்வை குறைபாடு மற்றும் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும்.
அதிக நேரம் கம்ப்யூட்டரில் பணிபுரியவர்கள் செய்ய வேண்டியவை என்ன?
தினமும் 6–8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்
நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் (தர்பூசணி, வெள்ளரிக்காய், ஸ்ட்ராபெர்ரி) சாப்பிடுவது நல்லது
அடிக்கடி கண்களை சிமிட்டு ஈரப்பதத்தை நிலைத்திருக்க செய்ய வேண்டும்
ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு 20 வினாடி கண்களுக்கு ஓய்வு
தேவையானவர்கள் Anti-glare கண்ணாடிகள் பயன்படுத்தலாம்
கண்களை பாதுகாக்க தினசரி பழக்கங்களை சிறிது மாற்றினால் போதுமானது!