குடைமிளகாயில் குறைந்த அளவு கலோரி மற்றும் கொழுப்பு சத்தும் அதிக அளவு வைட்டமின்கள இருப்பதாக கூறப்படுகிறது.
வைட்டமின் ஏ பி சி கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் குடைமிளகாய்களில் இருப்பதால் இவை சிறப்பு தன்மை உடையதாக கருதப்படுகிறது.
வயிற்றுப்புண் மலச்சிக்கல் ஆகியவர்களுக்கு குடைமிளகாய் தகுந்த தீர்வு என்றும் கூறப்படுகிறது. மேலும் மலேரியா பல்வலி ஆகியவற்றை கட்டுப்படுத்தும் சக்தி குடமிளகாயில் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது என்றும் தேவை இல்லாத கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது.
குடை மிளகாய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காது என்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இதை தினசரி எடுத்துக் கொண்டால் பசியை குறைத்து உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கிறது என்றும் கூறப்படுகிறது.