Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புற்றுநோயைக் கிருமிகளை வளரவிடாமல் தடுக்கும் புரோக்கோளி..

புற்றுநோயைக் கிருமிகளை வளரவிடாமல் தடுக்கும் புரோக்கோளி..
, சனி, 1 ஜனவரி 2022 (23:52 IST)
புரோக்கோலியில் எண்ணற்ற சத்துப்பொருள்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் புரோக்கோளியில் உள்ள சத்துப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவுகின்றது.
 
ஒவ்வொரு முறையும் இரண்டு முதல் மூன்று கப் ப்ரோக்கோளி வீதம் வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்து வந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலம் புற்றுநோயைக் கிருமிகளை வளரவிடாமல் தடுக்கலாம் என்கிறது தற்போதைய ஆய்வு முடிவுகள்.
 
புற்று நோய்க்குச் சமமாக இன்றையச் சூழலில் மக்களை அதிகமாக அச்சுறுத்தி வரும் நோய் மாரடைப்பு. புரோக்கோலியில் உள்ள  பிகாம்ப்ளக்ஸும் எனும் வைட்டமின் எ, சி, ஈ, ஆகிய உயிர்ச்சத்துக்களும் இதய நோயிலிருந்தும் இதயத்தைக் காக்கிறது. உடனடி மாரடைப்பு  வராமலும் தடுக்கிறது.
 
தைராய்டு எனப்படும் முன்கழுத்துக் கழலைக்கு புரோக்கோலி மிகச்சிறந்த மருந்தாகும். இதனைப் பச்சையாக சாப்பிட்டு வந்தால் தைராய்டு சுரப்பியின் செயற்பாடு கட்டுக்குள் இருக்கும்.
 
பிரசவகாலத்தில் பெண்களுக்கு அதிகம் தேவை கால்சியம் நிறைந்த உணவுகள். புரோக்கோலி கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான  கால்சியத்தை அளிக்கக்கூடியது. இதை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவதால் பிறக்கும் குழந்தையின் மூளை ஆரோக்கியத்துக்கு உதவும்.
 
இரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த புரோகோலிக்கு குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் வல்லமையும் உண்டு. பத்து கலோரி புரோக்கோலியில் சுமார் 1கிராம் நார்ச்சத்து இருப்பதால் இது ஜீரணசக்தியை அதிகரிக்கும் நற்பணியைச் செய்யும்.
 
அதுமட்டுமல்ல ப்ரோக்கோளியைப் பச்சையாகப் பயன்படுத்துவதால் வயிற்றில் தேவையற்று வளரும் சில தசைகளின் வளர்ச்சியைக்  குறைக்கிறது.
 
இளசான புரோக்கோலி புரோஸ்டேட் புற்றுநோய், பெண்களிடம் ஏற்படும் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்த் தாக்குதலைத் தடுக்கிறது என சில ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். ஆரம்ப கால மார்பகப் புற்றுநோயை அழிக்கும் சக்தி புரோக்கோலிக்கு  உண்டு.
 
புரோக்கோலியில் இருக்கும் நார்ச்சத்து உடலின் செரிமான சக்திக்கு உதவும். இதைச் சாப்பிடுவது குடல் ஆரோக்கியம் மேம்படும்; செரிமானம்  சீராகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அற்புத பலன்களை அள்ளித்தரும் எலுமிச்ச பழச்சாறு !!