Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினமும் இளநீர் அருந்தினால் என்னவாகும்??

Advertiesment
தினமும் இளநீர் அருந்தினால் என்னவாகும்??
, வெள்ளி, 8 ஜூலை 2022 (08:01 IST)
தினமும் இளநீர் அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். கண்கள் குளிர்ச்சி பெறும். வயிற்று நோய்கள் அகலும்.


 
வயிற்றில் வாயுவின் சீற்றம் மிகுந்து அவை வயிற்றின் உட்புறச் சுவர்களை தாக்கி புண்களை ஏற்படுத்தும்.

நீண்ட பட்டினி, அதிக உணவு, உடலுக்கு ஒவ்வாத உணவு இவற்றால் ஏற்படும் அஜீரணக் கோளாறு அனைத்தையும் தீர்க்கும் குணம் இளநீருக்கு உண்டு.
 
இளநீர் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும். இரத்தச் சோகையைப் போக்குகிறது.
 
குழந்தைகளுக்கு கொடுத்தால் இதிலுள்ள சத்துக்கள் எலும்புகளுக்கும், உறுப்புகளுக்கும் வலுகொடுக்கும். உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 
அம்மை நோயின் தாக்கம் கண்டவர்கள் இளநீர் அருந்தினால் நோயின் வீரியம் குறையும். நாவறட்சி, தொண்டைவலி நீங்கும். சிறுநீர் பெருக்கியாகவும், சிறுநீரகம் சீராக இயங்கவும், இளநீர் உதவுகிறது. சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
 
மூளைக்கு புத்துணர்வும், நரம்புகளுக்கு வலுவும் ஏற்படுத்துகிறது. நினைவாற்றல் தூண்டப்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் அடிவயிறு வலிக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.
 
இரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால் இருதயம் சீராக செயல்படும். இதய வால்வுகளை பலப் படுத்தும். தினமும் இளநீர் அருந்தி வந்தால் இதய நோய் ஏதும் அணுகாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவகோடா பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்