Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 2 April 2025
webdunia

கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வு தரும் துளசி!

Advertiesment
கல்லீரல்
, ஞாயிறு, 16 ஜனவரி 2022 (00:22 IST)
துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு  மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும். துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம்  கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.
 
கல்லீரலை வலூவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளங்கனி. துளசி இலைகள் 10 எடுத்து கழுவி, அத்துடன் ஏலக்காய் 4,  சுக்கு அரை துண்டு சேர்த்து நசுக்கி 1 குவளை நீரில் கலந்து காய்ச்சி, அரை குவளையாக வடிகட்டி தேவையானால் சிறிது பால்,  தேன் கலந்து பருகிவர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 
இத்துளசி கஷாயம், துளசி சிரப், ஆஸ்த்மா, இளைப்பு நோய், மூளைக் காய்ச்சல், மலேரியா, நிமோனியா காய்ச்சல், கல்லீரல்  சிதைவு ஆகிய நோய்களை வராமலும், வளர விடாமலும் தடுக்கும் ஆற்றல் உண்டு. மதுபானம், போதை மருந்து, சிகரெட்  புகையால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மெல்ல மெல்ல சிதைவடையும்.
 
எலுமிச்சம்பழமும் தேனும் தக்காளி ரசமும் சம அளவு கலந்து காலை-மாலை நேரங்களில் வேளைக்கு ஒரு அவுனஸ் வீதம்  சாப்பிட்டு வர கல்லீரலின் சீர் கேடுகள் மறைந்து உடம்பு தெம்பாக இருக்கும். இதனால் சயரோக இருமலும் கூட குறைந்து  விடுகிறது. இரத்த ஓட்டம் சீர்பெறும்.
 
சிறு நீரீலுள்ள சர்க்கரையும் குறைந்து ஈரல் பலப்பட வேண்டுமென்றாலும், கல்லீரலில் ஏதேனும் கோளாறு இருந்தாலும், பாலில்  எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, உடனே சாப்பிட்டு வாருங்கள். சீக்கிரத்தில் குணமாகும். கல்லீரல் மண்ணீரலில் கோளாறுகள்  ஏதேனும் இருந்தால், துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள். தொடர்ந்து சாப்பிட்டால் ஈரல் கோளாறுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். 
 
வாரம் ஒருநாள் கீழாநெல்லி, கரீசலாங்கண்ணி, கொத்துமல்லி ஆகிய 3 கீரைகளையும் நெய், சீரகம், பாசிப்பருப்புடன் சமையல்  செய்து பகல் உணவில் சாப்பிட்டு வர கல்லீரல் சேதமடையாமல் வலிமையுடன் செயல்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொடுகை விரட்ட ஆறு சிறந்த இயற்கை வழிகள்!